ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்கிங் சென்ற போது படுகொலை: புதுக்கோட்டையில் பதற்றம்
புதுக்கோட்டை: வாக்கிங் சென்ற ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் படுகொலை செய்யப்பட்டதால் புதுக்கோட்டை அருகே பரபரப்பு நிலவுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சாந்தி. இவரது கணவர் குமார் . இவரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தான்.
குமார் நடைபயிற்சிக்காக இன்று (31.03.2013) காலை 5.30 மணிக்கு ஏம்பல் சாலையில் சென்றுள்ளார். கடை வீதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று கொண்டிருந்த போது, அங்கு காத்திருந்த ஒரு மர்ம கும்பலால் குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதிமக்கள் கொலையாளிகளை பிடிக்கக் கோ ரி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர்மாவட்ட எஸ்.பி. தமிழ்சந்திரன் கொலையாளிகளை பிடிப்பதாக உத்திரவாதம் அளித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
குமாரின் உடல் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications