For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

23 -வயதில் சிஏ, ஐசிடபுள்யு.ஏ, ஐசிஎஸ் ஐ பாஸ்: டெல்லி மாணவி சாதனை!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Delhi girl becomes CA, Cost Accountant and Company Secy at 23
டெல்லி: சிஏ, ஐ.சி.டபுள்யு.ஏ, ஐ.சி.எஸ்.ஐ ஆகிய படிப்புகளை படித்து அதில் சிறப்பாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார் டெல்லியைச் சேர்ந்த 23 மாணவி ஒருவர்.

பொதுவாகவே சிஏ, ஐசிடபுள்யுஏ படிப்புகள் கடினமானவை. இந்த படிப்புகளை படிப்பவர்களுக்கு மனதில் உறுதியிருக்க வேண்டும் என்று எல்லோரும் சொல்வார்கள். ஏனெனில் அந்த படிப்புகளில் தேர்ச்சி பெறுவது என்பது எளிதல்ல. பலமுறை முயன்றால் மட்டுமே வெற்றி பெறமுடியும்.

ஆனால் டெல்லியை சேர்ந்த பல்லவி சக்தேவா என்ற மாணவி, சிஏ மட்டுமின்றி ஐசிடபுள்யுஏ, ஐசிஎஸ்ஐ ஆகிய படிப்புகளையும் 23 வயதுக்குள் தேர்ச்சி பெற்று, மிக இளம் வயதில் தேர்ச்சி பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.காம் பட்டப்படிப்பு படித்த சக்தேவா அதன்பின் 2 ஆண்டுகளில் இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரின் மகள், 24 வயதில் சிஏ முடித்தது மிகப்பெரும் சாதனையாக பேசப்பட்டது. இந்த நிலையில் இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் சிஏ, ஐசிடபுள்யு.ஏ, ஐ.சி.எஸ்.ஐ ஆகியவற்றினை 23 வயதில் முடித்துள்ளார் டெல்லி பெண்.

English summary
Nurturing the ambition to make it big in the finance arena, a 23-year-old Delhi girl has qualified as chartered accountant, cost accountant, and also company secretary — becoming possibly the youngest person to complete all the three professional accounting courses..
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X