குஜராத்தை 'இந்து மாநிலமாக' அறிவிப்போம்: விஸ்வ இந்து பரிஷத்

இந்துக்களின் முன்னேற்றம் என்ற கோஷத்துடன் விஸ்வ இந்து பரிஷத் நேற்று புதிய இயக்கத்தை ஆரம்பித்துள்ளது. வரும் 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த அமைப்பின் பொன் விழாவையொட்டி குஜராத்தில் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ஏராளமான சாதுக்கள் பங்கேற்றனர். ஆனால், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை. அவருக்கும் தொகாடியாவுக்கும் ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் விஎச்பி சர்வதேசத் தலைவர் பிரவீன் தொகாடியா பேசுகையில், இன்னும் இரண்டு ஆண்டுகளில் குஜராத்தின் 18,000 கிராமங்களிலும் விஎச்பியின் கிளைகள் துவக்கப்படும். 2015ம் ஆண்டில் குஜராத்தை இந்து மாநிலமாக அறிவிப்போம்.
இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்துக்களின் பாதுகாப்பும், இந்துக்களின் வளர்ச்சியும் இந்துக்களின் கையில் தான் உள்ளது. அவர்கள் முழு இந்துக்களாக மாற வேண்டும், தீவிர இந்துக்களாக மாற வேண்டும். அப்போது தான் ராமர் கோவிலை நம்மால் கட்ட முடியும்.
இந்துக்களின் தலைவர்களை எங்களது தலைவர்களாக அங்கீகரிப்போம் என்றார்.
நரேந்திர மோடி தான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்கிறார்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு, யார் வேண்டுமானாலும் பிரதமராக கனவு காணலாம் என்றார் தொகாடியா.
பாஜகவின் உயர்மட்ட நாடாளுமன்றக் குழுவில் நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளாரே என்ற கேள்விக்கு, இதெல்லாம் ரொம்ப சின்ன விஷயம். இது குறித்தெல்லாம் கருத்து சொல்ல முடியாது என்றார்.
விஎச்பியின் செயலாளர் வினாயக்ராவ் தேஷ்பாண்டே பேசுகையில், குஜராத்தில் நமது இயக்கத்துக்கு 10 ஆண்டுகளுக்கு முன் 10,000 கமிட்டிகள் இருந்தன. இப்போது அது 6,000 ஆகக் குறைந்துவிட்டது என்றார்.
இந்தக் கூட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியாவின் மனைவி ஜாக்ருதியும் கலந்து கொண்டார். இவரது மரணத்துக்கு மோடியை ஜாக்ருதி குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications