கருங்கல் நகரில் கலவரம்- மாணவர்கள் மீது காங்கிரஸார் சரமாரி தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் நகரில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீது காங்கிரஸார் சரமாரியாக தாக்கியதால் பெரும் வன்முறை மூண்டுள்ளது.
தனி ஈழம் அமைக்கக் கோரியும், போர்க்குற்றவாளியான ராஜபக்சேவைக் கைது செய்யக் கோரியும் மாணவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் நகரில் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மனிதச் சங்கிலியாக நிற்க மாணவர்கள் வந்தபோது அவர்கள் மீது காங்கிரஸார் சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர்.
இருப்பினும் மாணவர்கள் பதிலுக்கு தாக்குதல் போராட்டத்தில் இறங்கினர். மேலும் போராட்டத்தையும் கைவிடாமல் தொடர்ந்து நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.












Click it and Unblock the Notifications