பஸ் டிக்கெட் மிஷின்கள்.. துவக்கப்பட்ட அன்றே நிறுவனத்துக்கு டென்டர் தந்தது ஏன்?- கருணாநிதி

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
போக்குவரத்துத் துறையின் சார்பில் பஸ்களில் டிக்கெட் வழங்குவதற்கான எலக்ட்ரானிக் மெஷின்களைத் தயாரிப்பதற்காக ரூ.200 கோடிக்கான பணி ஒரு நிறுவனத்துக்குத் தரப்பட்டுள்ளது.அந்த நிறுவனத்துக்கு இயந்திரம் தயாரிப்புக்கான எந்த அனுபவமும் இல்லை. டெண்டர் கோரப்பட்ட அன்றுதான் அந்த நிறுவனமே தொடங்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசு துறை பற்றிய இந்தக் குற்றச்சாட்டில் உள்ள உண்மை என்ன என்பதைப் பற்றி அரசின் சார்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பேரவையில் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால் ஸ்டாலினுக்குப் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படாததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக 4 நாள்களுக்குப் பிறகு அமைச்சர் பதில் அளிக்கிறார் என்றால் பொதுமக்கள் சந்தேகம் கொள்வார்கள் அல்லவா இந்த புகார் தொடர்பாக திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் சார்பில் பிரச்னை எழுப்பப்பட்டுள்ள நிலையில், பொறுப்புள்ள அமைச்சர் பதில் அளிக்க வேண்டும்.அதைவிட்டு கேள்வி எழுப்பியவர்களைப் பார்த்து அவர்களுக்குத் தகுதி இல்லை என்று கூறுவதா?
இன்ஜெனரி டெக்னாலஜீஸ் சொல்யூஷன்ஸ் என்ற கம்பெனிக்கு டெண்டர் தரப்பட்டதை அமைச்சர் ஒப்புக்கொள்கிறார். அப்படியென்றால் அந்தக் கம்பெனி என்று தொடங்கப்பட்டது டெண்டர் நிபந்தனையாக 3 ஆண்டுகள் அனுபவம் வேண்டும் என்று சொல்வது ஏன் புறக்கணிக்கப்பட்டது இந்த நிறுவனத்துக்காக அரசின் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டது ஏன் என்பது தொடர்பாக முதல்வரோ, போக்குவரத்துத் துறை அமைச்சரோ பதில் அளிப்பார்களா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications