For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ள இந்தியர் பாபி ஜின்டாலுக்கு ஆதரவு சரிகிறது

By Chakra
Google Oneindia Tamil News

Bobby Jindal
வாஷிங்டன்: 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லூசியானா மாகாண கவர்னர் பாபி ஜின்டாலுக்கு ஆதரவு குறைந்து வருகிறது.

ஜார்ஜ் புஷ் சார்ந்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் அடுத்த தேர்தலில் ஒபாமா சார்ந்துள்ள ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட பரிந்துரைக்கப்படலாம் என்று பேசப்பட்டு வருகிறது.

இந் நிலையில், சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ஜின்டாலுக்கு ஆதரவு பெருமளவு சரிந்துள்ளது தெரியவந்துள்ளது. அவருக்கு இப்போது 38 சதவீத ஆதரவே உள்ளது. அவரது சொந்த மாகாணமான லூசியானாவிலேயே அதிபர் பராக் ஒபாமாவை விட பின்தங்கியுள்ளார் ஜின்டால்.

லூசியானாவில் இரண்டாவது முறையாக ஜின்டால் கவர்னராக இருப்பது குறிப்பிடத்தக்கது. 41 வயதான ஜின்டாலுக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் 51 சதவீத ஆதரவு இருந்தது. இது இப்போது 38 சதவீதமாக சரிந்துள்ளது.

அதே நேரத்தில் குடியரசுக் கட்சியின் சார்பில் லூசியானா கவர்னர் பதவிக்கு போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படும் ஜின்டாலின் இரு போட்டியாளர்களான ஜே டார்டென், டேவிட் விட்டெர் ஆகியோருக்கு ஆதரவு 60 சதவீதமாக அதிகரித்துள்ளது.

English summary
Amid speculation over a 2016 presidential bid by Louisiana's Indian-American Governor Bobby Jindal, his approval rating has dropped to a low 38 per cent. 
 According to a latest poll released on Tuesday, Jindal is even running behind US President Barack Obama, in his own state, where in recent weeks he has come up with some innovative measures like elimination of income tax and increasing sales tax. Into the second term of his governorship, 41-year-old Jindal, who is receiving great attention at the national level, has an approval rating of 38 per cent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X