'இந்தியா இருக்கும் வரை காங்கிரஸும் இருக்கும்' என்றார் காந்தி: ஜெ.வுக்கு குமரி அனந்தன் பதிலடி
சென்னை: இந்தியா வாழும் வரை காங்கிரஸ் கட்சியும் இருக்கும் என்று காந்தியடிகள் குறிப்பிட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், காந்தி பேரவையின் தலைவருமான குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தில், ‘‘காங்கிரஸ் கட்சியை மகாத்மா காந்தி கலைக்கச் சொன்னார்'' என்று பேசியதையும், காங்கிரஸ் உறுப்பினர்கள் அதற்கு மறுப்பு சொன்னதையும் படித்தேன். காந்தியடிகள் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன், ‘‘வன்முறைகளற்ற வழியில் காங்கிரஸ் பல போராட்டங்களை நடத்தியதால் இந்தியா அரசியல் சுதந்திரம் பெற்று விட்டது. ஆனாலும், சமுதாய பொருளாதார சுதந்திரம் பெற வேண்டியுள்ளது. எனவே, காங்கிரசே, தன்னை மக்களுக்கு சேவை செய்யும் சேவா அமைப்பாக தன்னை மலரச் செய்துகொள்ள வேண்டும்'' என்று எழுதினார்.
காங்கிரசின் அரசியல் நோக்கம் நிறைவேறியது போல், மக்களின் நலமும் சிறந்து விளங்குவதற்கு காங்கிரஸ் தன்னை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்ற பொருளிலே காந்திஜி தன் விருப்பத்தை வெளியிட்டார். அதற்கு ஆதாரமாக, அவர் மறைவதற்கு 3 நாட்களுக்கு முன் எழுதிய கடிதத்தில், ‘‘இந்தியாவின் மூத்த தேசிய அரசியல் அமைப்பு காங்கிரஸ்''. சுதந்திரம் பெற்றுத்தந்த அந்த அமைப்பு மறைந்து போக அனுமதிக்க முடியாது. இந்த நாடு வாழும்வரை காங்கிரஸ் கட்சியும் இருக்கும் என்று காந்தி குறிப்பிட்டார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications