சத்தீஸ்கரில் பயங்கரம்: குழந்தைகள், சிறுமிகள், பெண்கள் 9 பேரை வெட்டிச் சாய்த்த மனநலம் குன்றிய நபர்
ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மனநலம் சரியில்லாத ஒருவர் 2 முதல் 65 வயது வரையிலான 9 குழந்தைகள், சிறுமிகள், பெண்களை வெட்டிக் கொலை செய்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பலராம்பூர் மாவட்டத்தில் உள்ள பர்ஹதோலா கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டு நாகேஷியா(35). அவர் நேற்று மதியம் 1.30 மணிக்கு அதே ஊரைச் சேர்ந்த லால்கி பாய்(60), குசும் நாகேஷியா(4), மஞ்சு நாகேஷியா(3), சீதாமுனி பாய்(25), பிரியங்கா(2), மச்கி பாய்(65), கல்கி பாய்(60), சங்கீதா(10) மற்றும் சஞ்ஜீதா(3) ஆகிய 9 பேரை டாங்கியா என்னும் ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்தார்.
ஆண்கள் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்கள் படுகொலை செய்யப்பட்டது அறிந்து கிராம மக்கள் கூடினர். ரத்த வெள்ளத்தில் தங்கள் உறவினர்கள் பிணமாகக் கிடப்பதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பலராம்பூர் மாவட்ட கலெக்டர் பிரசன்னா, எஸ்.பி. ஜி.எஸ். தாரோ போலீ்ஸ் படையுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் பாண்டுவை பிடித்தனர்.
9 பேரை கொன்று குவித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது என போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications