பெங்களூரில் பைக்கில் செல்பவரா நீங்கள்?: காற்றில் ஓவர் மாசு, மாஸ்க் போட்டுக்கங்க
பெங்களூர்: பெங்களூரில் காற்று அதிக அளவில் மாசடைந்து வருவதால் இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும் சுமார் 2.88 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக தலைநகர் பெங்களூர் கார்டன் சிட்டி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அண்மை காலமாக பெங்களூரில் உள்ள மரங்கள் சாலை விரிவாக்கம், அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள் கட்ட வெட்டப்பட்டுள்ளன, வெட்டப்பட்டு வருகின்றன. இதனால் அனைத்து சீசனிலும் குளு குளு என்று இருக்கும் பெங்களூரில் தற்போது சென்னையை விட அதிகமாக வெயில் அடிக்கிறது.
இது தவிர நகரில் ஏராளமான வாகனங்கள் இருப்பதால் காற்று மாசுபட்டுள்ளது.

ஓவர் மாசு
கர்நாடகா மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பரில் ஒரு ஆய்வு நடத்தியது. அதில் பெங்களூரில் காற்று அதிக அளவில் மாசுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

விக்டோரியா மருத்துவமனை, பீன்யா பக்கம் போகாதீர்கள்
காற்றில் உள்ள ஆர்எஸ்பிஎம்-மின் (respirable suspended particulate matter)) அளவு 100க்குள் இருக்க வேண்டும். விக்டோரியா மருத்துவமனை அருகே (258), ஆம்கோ பேட்டரீஸ் (235), கேஹெச்பி தொழிற்துறை பகுதி (201), கிராபைட் இந்தியா(177), பீன்யா தொழிற்துறை பகுதி (157), யஷ்வந்த்பூர் காவல் நிலையம் (119) ஆகிய இடங்களில் காற்றில் அதிக அளவில் ஆர்எஸ்பிஎம் உள்ளது.

காந்தி சர்க்கிள் பக்கமும் போகாதீங்க
தாவானகெரே பகுதியில் உள்ள காந்தி சர்க்கிள் அருகே காற்றில் உள்ள ஆர்எஸ்பிஎம் அளவு 123க உள்ளது.

பெங்களூரில் மட்டும் 28,81,791 பைக்குகள்
கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதி நிலவரப்படி பெங்களூரில் மட்டும் 28,81,791 இரு சக்கர வாகனங்கள் உள்ளன.

பைக்கில் செல்பவர்கள் பாவம்
2 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் நான்கு சக்கர வாகனங்களுக்கு பின்னால் செல்கையில் அவற்றில் இருந்து வெளிப்படும் புகையை சுவாசிக்கின்றனர். இதனால் அவர்களுக்கு சுவாசம் தொடர்புடைய பிரச்சனைகள் வருகிறதாம். அதனால் இரு சக்கர வகானங்களில் செல்பவர்கள் மாஸ்க் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாசால் ஏகப்பட்ட நோய்கள்
காற்றில் உள்ள நச்சுப் பொருட்கள் அதிக அளவில் இருப்பதால் பல்வேறு நாள்பட்ட சுவாச நோய்கள், நுரையீரல் பிரச்சனை, பாக்டீரியா, வைரஸ் தொற்று உள்ளிட்டவை ஏற்படுபவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications