For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிதி மோசடி: அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் ராமநாதன் அதிரடியாக சஸ்பென்ட்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: நிதி மோசடி செய்ததாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ராமநாதனை சஸ்பென்ட் செய்து ஆளுநர் ரோசய்யா உத்தரவிட்டிருக்கிறார்.

84 ஆண்டுகால வரலாற்றுப் பெருமைக்குரியது சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம். இதன் துணைவேந்தராக இருப்பவர் ராமநாதன். அண்மைக்காலமாக பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து சர்ச்சையில் சிக்கியது அண்ணாமலைப் பல்கலைக் கழகம். இதனால் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து சிறப்பு தணிக்கைக் குழு ஒன்று அண்ணாமலைப் பல்கலைக் கழக நிதி முறைகேடுகள் பற்றி விசாரிக்க தமிழக அரசால் அமைக்கப்பட்டது. இக்குழுவினர் பல்கலைக் கழக நிதியை தவறுதலாக பயன்படுத்தி மோசடி செய்தல்., தேவைக்கு அதிகமான பணியிடங்களை நியமித்து ஊதியம் அளித்தல், பி.எப். பனத்தை செலுத்தாமல் இருப்பது என பல்வேறு முறைகேடுகளைக் கண்டுபிடித்து அரசிடம் அறிக்கையாக அளித்தனர்,

இக்குழுவின் அறிக்கை ஆளுநர் ரோசய்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து இன்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ராமநாதனை சஸ்பென்ட் செய்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் நிர்வாக அதிகாரியாக ஷிவ்தாஸ்மீனாவை தமிழக அரசு வியாழக்கிழமையன்றுதான் நியமித்த்து.அவர் பொறுப்பேற்ற 2 நாளிலேயே அதிரடியாக துணைவேந்தர் சஸ்பென்ட் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

English summary
Following financial irregularities at the 84-year-old Annamalai University, Tamil Nadu governor K Rosaiah on Saturday suspended its vice-chancellor M Ramanathan. The action comes two days after the state government appointed IAS officer Shiv Das Meena as the university administrator.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X