ஓட்டு போடாதவங்க கேள்வி கேட்கக் கூடாது: சுனிதா வில்லியம்ஸ்

Subscribe to Oneindia Tamil

Sunita Williams
அகமதாபாத்: ஓட்டுப் போடுவது நம் ஜனநாயக கடமை. ஓட்டு போடாதவர்களுக்கு சமூகத்தில் நிகழும் குறைபாடுகள் குறித்து கேள்வி கேட்பதற்கு, உரிமை இல்லை' என்று நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சுனிதா வில்லியம்ஸ்(47). அவரது தந்தை, குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். சுனிதா, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான "நாசா' வில் விண்வெளி வீராங்கனையாக உள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ், தற்போது, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக் கழகம் சுனிதாவுக்கு நேற்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

இந்த விழாவில் சுனிதா வில்லியம்ஸ் பேசியதாவது,

ஜனநாயக நாட்டில் தேர்தலுக்கு முக்கிய பங்கு உண்டு. தேர்தலில் வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை. ஜனநாயகத்தில், நாமும் பங்கேற்கிறோம் என்பதை வாக்களிப்பதன் மூலமே வெளிப்படுத்த முடியும். ஓட்டு போடாதவர்களுக்கு சமூகத்தில் நிலவும் குறைபாடுகள் குறித்து கேள்வி கேட்பதற்கோ, புகார் தெரிவிப்பதற்கோ உரிமை இல்லை.

ஜனநாயக அமைப்பின் மீது கூறப்படும் ஒரே குறைபாடு, தாமதம் தான். ஜனநாயக அமைப்பில் எந்த மாற்றமும் தாமதமாகத் தான் ஏற்படும். ஒரு வகையில் பார்த்தால் இந்த தாமதம் ஆரோக்கியமானதே. ஒரே இரவில் ஏற்படும் மாற்றங்கள், மிகவும் அபாயகரமானவை. கடுமையாக உழைத்தால், எந்த விஷயத்திலும் வெற்றியை அடையலாம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+