அண்ணன் அழகிரியை சந்திக்க மதுரை வந்த கனி: இரண்டரை மணிநேரம் ஆலோசனை

திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கனிமொழி இன்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து கிளம்பி மதுரைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அண்ணனைப் பார்க்க வந்திருக்கிறேன்
மதுரையில் நடக்கும் கட்சி பிரமுகர் திருமண விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன். குறிப்பாக என் அண்ணன் அழகிரியை சந்திக்க வந்துள்ளேன் என்றார் கனிமொழி.
தேமுதிகவுடன் கூட்டணி?
தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து அந்தந்த கட்சி தலைவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கனிமொழி தெரிவித்தார்.
கட்சி பிரமுகர் திருமண விழாவில் கனி
கட்சி பிரமுகர் ஒருவரின் திருமண விழாவில் கலந்து கொண்டார் கனிமொழி. அதன் பிறகு பிடிஆரின் வீட்டுக்கு சென்றார்.
அண்ணனுடன் இரண்டரை மணிநேர சந்திப்பு
டிவிஎஸ் நகரில் உள்ள அழகிரி வீட்டுக்கு சென்ற கனிமொழி அங்கு மதிய உணவு சாப்பிட்டார். அண்ணனுடன் இரண்டரை மணிநேரம் ஆலோசனை நடத்தினார். குடும்ப பிரச்சனை பற்றி ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications