கோயம்பேட்டில் காய்கறி விலையைக் கேட்டாலே கிறுகிறுக்குதே

Subscribe to Oneindia Tamil

Vegetables cost dearly in Koyambedu market
சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து வெகுவாகக் குறைந்துள்ளதால் காய்கறி விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்தும், கர்நாடகா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்தும் காய்கறி வருகிறது. இந்த ஆண்டு போதிய மழை இல்லாமல் காய்கறி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் கோயம்போடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது.

கர்நாடகாவில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 20 லாரிகளில் வரும் பீன்ஸ் தற்போது வெறும் 10 லாரிகளில் மட்டுமே வருகிறது. இதே போன்று 15 லாரிகளில் வந்த வெண்டைக்காய் தற்போது 10 லாரிகளில் மட்டுமே வருகிறது. 10 லாரி இஞ்சி 5 லாரியாக குறைந்துள்ளது. இப்படி வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் ரூ.15க்கு விற்பனையான ஒரு கிலோ பீன்ஸ் தற்போது ரூ.35க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெண்டைக்காய் விலை ரூ.15ல் இருந்து 22க உயர்ந்துள்ளது. ரூ.20க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பெரிய பீன்ஸ் தற்போது ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ இஞ்சியின் விலை ரூ.40ல் இருந்து 50க உயர்ந்துள்ளது. பிற காய்கறிகளின் விலை உயரவில்லை.

மொத்த விலை கிலோவுக்கு ரூ.15 வரை உயர்ந்துள்ளதால் சில்லறை விலை மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+