For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று உலக சுகாதார தினம்.. கோவையில் டாக்டர்கள், நோயாளிகள் சந்திப்புக்கு ஏற்பாடு

Google Oneindia Tamil News

கோவை: இன்று உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கோவையில் இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளை சார்பில் மருத்துவர் - நோயாளிகள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவர் சங்கம், கோவை கிளையின் தலைவர் டாக்டர் ஏ.கே.ரவிக்குமார், செயலாளர் டாக்டர் மகேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில், கோவை, சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய மருத்துவ சங்க வளாகத்தில் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை இந்த சந்திப்பு

இந்த ஆண்டுக்கான உலக சுகாதார தினத்தின் கருப்பொருளாக உயர் ரத்த அழுத்தக் கட்டுப்பாடு என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே உயர் ரத்த அழுத்த கட்டுப்பாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இன்றைய சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ரத்த அழுத்தத்தை எப்படி கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வுத் தகவல்கள் அளிக்கப்படும்.

மேலும், பொதுமக்களுக்காக சுகாதார விழிப்புணர்வுப் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறந்த முறையில் மருத்துவர்களுடன் உரையாடும் நோயாளிகளுக்கு பரிசுகளும் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்ள விரும்புவோர் இந்திய மருத்துவ சங்கம், கோவை கிளையை 0422-2471824 தொடர்பு கொண்டு பங்கேற்பை உறுதிப்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. [email protected] என்ற இமெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ளளாம்.

English summary
IMA Coimbatore Branch is glad to invite you to a Doctor-Patient Interaction Program that we have organized at IMA Hall, Syrian Church Road, Coimbatore between 5 PM and 6 PM on 07-April-2013, on account of the World Health Day. Since the WHO theme for this year's World Health Day is Hypertension Control, our focus will be on enlightening the public on the perils of not keeping their blood pressure under control.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X