பள்ளியின் தேர்வு அட்டவணையை மாற்றிய இசைக்குழு
Subscribe to Oneindia Tamil
ஆஸ்லோ: போராட்டம், வன்முறை சம்பவம் ஆகியவற்றால் கல்லூரி, பள்ளிக்கூட பரீட்சைகள் சில நேரங்களில் மாற்றியமைக்கும் நிலை உருவாதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நார்வே நாட்டில் ஒரு இசைக்குழுவின் வருகை பள்ளி தேர்வு அட்டவணையையே மாற்றி அமைத்துவிட்டது.
கனடா நாட்டை சேர்ந்த பிரபல இசை கலைஞர் ஜஸ்டின் பிபெர் வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில் நார்வே நாட்டிற்கு சென்று இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்.
இதனால் மாணவர்களின் கவனம் சிதறி விடும் என்பதால், நார்வேயின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள 5 பள்ளிக்கூட நிர்வாகம் பரீட்சைகளை தள்ளி வைத்து, புதிய அட்டவணையை வெளியிட்டன. இதற்கு நார்வே பள்ளி கல்வி துறையும் ஒப்புதல் கொடுத்துவிட்டது.












Click it and Unblock the Notifications