தமிழகத்தில் 'கட்சி வளர்ச்சி' நிதி திரட்டும் பாஜக: ரூ.10 முதல் ரூ.10,000 வரை ரசீதுகள்!
சென்னை: பாஜகவின் துவக்கி விழாவையொட்டி தமிழ்நாட்டில் கட்சியை வலுப்படுத்த கட்சி வளர்ச்சி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் நிதி வசூல் தீவிரமாக நடந்து வருகிறது.
இது குறித்து மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில், தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்றுக் கட்சி பா.ஜக தான் என்று மக்கள் முடிவு செய்து விட்டனர். தமிழகத்திலும் பாஜக மக்களிடம் செல்வாக்கு பெற்று, வளர்ந்து வருகிறது.
நாங்கள் இதுவரை கட்சி வளர்ச்சி நிதி திரட்டியது இல்லை. முதல் முறையாக வளர்ச்சி நிதி திரட்டும் பணியை ஸ்தாபன தினத்தில் இருந்து தொடங்கி இருக்கிறோம்.
இதற்காக ரூ.10 முதல் ரூ.10,000 வரை ரசீதுகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. வீடு வீடாக, கிராமம் கிராமமாக நிர்வாகிகள் மக்களை சந்தித்து நிதி திரட்டி வருகிறார்கள். வரும் 17ம் தேதி வரை இந்த பணி நடைபெறும்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்துக்கு ரூ. 1.5 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசியம் காக்க, தேசப் பணியாற்ற, கட்சி வளர்ச்சி நிதியை பொதுமக்கள் வாரி வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications