திருவாரூரில் எரிவாயுக் குழாய் கசிவு: அச்சத்தில் பொதுமக்கள்

திருவாரூர் மாவட்டம் காரியமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் தானியங்கி இயந்திரம் உதவியுடன் பூமிக்கு அடியிலிருந்து கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக பதிக்கப்பட்டுள்ள எரிவாயுக் குழாயில் நேற்று மதியம் 2 மணியளவில் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து இந்த காஸ் கசிவை அடைக்க ஓஎன்ஜிசி ஊழியர்கள் போராடினர். பைப்பிலிருந்து வரும் கசிவை அவர்களால் அடைக்க முடியவில்லை. இதனால் காரியமங்கலத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று அங்குள்ள ஒலிபெருக்கியில் பொதுமக்கள் யாரும் அடுப்பு பற்ற வைக்க வேண்டும். தீக்குச்சிகளை கொளுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தனர்.
இதனால் காரியமங்கலம், குளமாணிக்கம், பெரியகுருவாடி, இருள்நீக்கி, மாவட்டக்குடி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சமையல் கூட செய்யாமல் அச்சத்துடன் இருந்தனர். ஆனால் இந்த மாதிரி அறிவிப்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் மறுத்துள்ளார்.
இதனையடுத்து நேற்றிரவு காரைக்கால் மாவட்டம் நிரவியிலிருந்து ஓ.என்.ஜி.சி., தொழில் நுட்ப வல்லுநர்கள் காரியமங்கலத்துக்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று 2வது நாளாக காரியமங்கலம் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அரசு அதிகாரிகள் ஓ.என்.ஜி.சி., அதிகாரிகளை சந்திக்கச் சென்றுள்ளனர். பொதுமக்களிடம் உண்மை நிலவரம் குறித்து எடுத்துரைக்குமாறு அரசு அதிகாரிகள் ஓ.என்.ஜி.சி., அதிகாரிகளை வலியுறுத்துவார்கள் என தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications