இனி இரவில் மின்வெட்டு இருக்காதாம்: சொல்கின்றனர் மின்வாரிய அதிகாரிகள்
நெல்லை: மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் மின்வெட்டு நேரம் சற்று குறைந்துள்ளது.
தமிழ்நாட்டின் மின் தேவையை சமாளிக்க 12,000 மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால் 4,000 மெகாவாட் வரை மின்பற்றாக்குறை இருந்ததால் சென்னையில் 2 மணி நேரமும், பிற மாவட்டங்களில் 10 மணி நேரமும் மின்தடை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 1 வார காலமாக மின் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை உள்ளிட்ட முக்கிய அனல் மின் நிலையங்கள் 2970 மெகாவாட் நிலுவு திறனை கொண்டுள்ளது. தற்போது இந்த அனல் மின் நிலையங்களில் நிலுவு திறனை விட கூடுதலாக 3070 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் பல மாதங்களாக நின்று போயிருந்த காற்றாலை மின் உற்பத்தி நேற்று மீண்டும் தொடங்கியது. காற்றாலைகள் மூலம் 1,400 மெகாவாட் அளவு மின் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் காரணமாக மொத்த மின் உற்பத்தி 10,600 மெகாவாட் அளவை எட்டியுள்ளது. இதையடுத்து சென்னை தவிர பிற மாவட்டங்களில் மின்வெட்டு நேரம் சிறிதளவு குறைக்கப்பட்டது.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,
தமிழகத்தில் மின்சார உற்பத்திற்கும், தேவைக்கும் இடையேயான இடைவெளி 1,500 மெகாவாட் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக நெல்லை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் செய்யப்பட்டு வரும் மின்வெட்டு நேற்று 6 மணி நேரம் என்ற அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இரவில் மின்வெட்டு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரையும் மட்டுமே மின்வெட்டு செய்யப்பட்டது. தொடர்ந்து சில நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications