அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி? - கிளிண்டன் சூசகம்
வாஷிங்டன்: அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி போட்டியிடுவார் என கிளிண்டன் சூசகமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக 1993 முதல் 2001ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் பில் கிளிண்டன் . இவரது மனைவி ஹிலாரி கிளிண்டன் , ஒபாமாவின் அமைச்சரவையில் வெளியுறவு துறை அமைச்சராக நான்கு ஆண்டு பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவார் என்ற செய்திகள் வெளியாகிய போது, அதை ஹிலாரி கிளிண்டன் உறுதியாக மறுத்தார். இந்நிலையில், 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவார் என அவரது கணவரும் அமெரிக்க முன்னாள் அதிபருமான பில் கிளிண்டன் கூறியுள்ளார்.

விரிவுரையாளராக...
வெளியுறவு துறை மந்திரி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், பொருளாதார மற்றும் கல்லூரி கருத்தரங்கங்களில் விரிவுரையாளராக அவர் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

ஆதரவாளர்களிடையே பேசிய கிளிண்டன்...
அமெரிக்காவில் புதிய அதிபராவதற்குரிய தகுதி படைத்த பலர் இருக்கிறார்கள். இரண்டு முறைக்கு மேல் ஒருவர் அதிபர் பதவியை வகிக்க கூடாது என்ற கொள்கையில் திடமாக இருப்பவன் நான். எனினும், எதிர்காலத்தில் மூன்றாம் முறை அதிபராகும் எண்ணம் தற்போதைய அதிபர்களுக்கு ஏற்படுமானால், அதை நான் எதிர்க்க மாட்டேன்.

அடங்காத ஆசையில் திறமைசாலிகள்...
அமெரிக்காவின் அதிபராக ஒரு முறையாவது இருக்க வேண்டும் என்ற அடங்காத ஆசையில் ஏராளமான திறமைசாலிகள் சரியான வாய்ப்பை நோக்கி காத்திருக்கிறார்கள் என கூறினார்.

ஹிலாரியின் மௌனம்...
பதவி விலகலுக்கு பின்னர் அதிபர் வேட்பாளர் என்று சிலர் தன்னை முன்னிலைப்படுத்தும் போது அதை ஆமோதிக்காமலும், மறுக்காமலும் ஹிலாரி கிளிண்டன் மவுனம் காத்து வருகிறார்.

கருத்து பரவுகிறது...
இந்நிலையில், அவரது கணவர் பில் கிளிண்டன் ஹிலாரியை மனதில் வைத்துதான் இவ்வாறு பேசியுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications