ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தடையை நீக்க பசுமைத் தீர்ப்பாயம் மறுப்பு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கடந்த மாதம் விஷ வாயு கசிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி நகர மக்கள் போராடினர்.
பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து ஆலையை மூட மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவுப் பிறப்பித்தது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தெற்கு மண்டல பிரிவின் தலைவராக உள்ளார். அவர் முன்பு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது தங்களின் கருத்துக்களையும் இதில் கேட்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ, மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.
அவர்களின் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி இவர்களின் கருத்துக்களை கேட்கும் வகையில் வழக்கு விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு (ஏப்ரல் 12) ஒத்தி வைத்தார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, ஏப்ரல் 12 ம் தேதி நடைபெறும் விசாரணையின் போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆகியோரின் கருத்துக்களை கேட்ட பின்னரே, இந்த வழக்கில் தீர்ப்பளிக்க முடியும் என்று தெரிவித்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications