மாம்பழமாம்... மாம்பழம்: சொல்லும்போதே நாக்குல நீர் ஊறுதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மாம்பழ சீசன் கலக்கலாக தொடங்கிவிட்டது. விளைச்சல் அமோகமாக இருப்பதால் விலை குறையக்கூடும் என எதிர்பார்க்கின்றனர் வியாபாரிகளும், பொதுமக்களும்.

கோடை காலம் பிறந்ததும் பலவகை பழங்களும் வரத் தொடங்கும். குறிப்பாக மாம்பழம் அதிக அளவில் வரும். இந்த ஆண்டும் மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது. பங்கனபள்ளி, செந்தூரன் மாம்பழங்கள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் சராசரியாக 8 முதல் 10 லாரிகள் வரை மாம்பழம் வருகிறதாம்.

மாம்பழம்னா சேலம் தான்...

மாம்பழம்னா சேலம் தான்...

மாம்பழம் என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது சேலம். தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டத்தில் மாமரங்கள் அதிகம் உள்ளன.

செந்தூரா.. பைகன்பள்ளி

செந்தூரா.. பைகன்பள்ளி

சேலம் மாவட்டத்தில் சேலம் பெங்களூரா, மல்கோவா, அல்போன்சா, நடுசாலை, செந்தூரா, குதாதத், பில்பசந்த், பைகன்பள்ளி உள்ளிட்ட ரக மாம்பழங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

பங்கனப்பள்ளி...

பங்கனப்பள்ளி...

கடந்த சில நாட்களாக மாம்பழ விற்பனை களைகட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக பங்கனபள்ளி கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்கிறது. செந்தூரன் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கிறது.

அல்போன்ஸாவா... மல்கோவாவா...

அல்போன்ஸாவா... மல்கோவாவா...

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பங்கனபள்ளி, செந்தூரன், ருமானி, அல்போன்சா, மல்கோவா போன்ற ரகங்கள் அதிகமாக வரும். சேலம், விஜயவாடா மற்றும் உள்ளூரில் ஊத்துகோட்டை, புத்தூர், நாகலாபுரம், மணவாளநகர், செங்காடு ஆகிய பகுதிகளில் இருந்து அதிகமாக வருதாம்.

கறுப்பு மாங்காய்...

கறுப்பு மாங்காய்...

இந்த ஆண்டு மாமரங்கள் பூத்து இருந்தபோது மழை பெய்ததால் பூக்கள் பெருமளவில் உதிர்ந்துவிட்டது. எனவே விளைச்சல் 60 சதவீதம்தான் உள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலும் எதிர்பார்த்த அளவுக்கு விளைச்சல் இல்லை. மேலும் பனி பொழிவு காரணமாக மாங்காய்கள் கறுப்பாக காணப்படுகிறது.

விலை எப்படி?

விலை எப்படி?

மாம்பழங்கள் வரத்தும் குறைவாகவே இருக்கும்னு எதிர்பார்க்கப்படுவதால், மாம்பழ விலை இந்த ஆண்டு சூடாகவே இருக்கும். தற்போது வெயில் கடுமையாக இருப்பதால் சிறிய வடுமாங்காய்கள் உதிரவும் செய்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+