திருப்பதியில் 'ஜருகண்டி, ஜருகண்டி'.... இனிமேல் 'லேதண்டி, லேதண்டி'!

திருப்பதி கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டு விட்டு வருவதை விட இந்த ஜருகண்டியிலிருந்து தப்பி வருவதே பெரும்பாடாக இருக்கிறது என்பது 99 சதவீத பக்தர்களின் குமுறலாகும்.
சாமி கும்பிட வரும் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும்போது, அவர்களை பிடித்துத் தள்ளி விடுகிறார்கள் தேவஸ்தான ஊழியர்கள் என்று பக்தர்கள் குறை கூறுகிறார்கள். பெண்களையும் கூட இவர்கள் இப்படித் தள்ளி விடுவதே பெரும்
பிரச்சினையாகி வருகிறது.
சமீபத்தில் கூட நடிகர் ராகவா லாரன்ஸ் தனது தாயாருடன் கோவிலுக்குப் போயிருந்தபோது அவரது தாயாரைப் பிடித்துத் தள்ளி விட்டு விட்டனர். இது பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் தற்போது இந்த ஜருகண்டிக்கு புல்ஸ்டாப் வைக்கவுள்ளது தேவஸ்தானம்.
திருமலை- திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கனுமூரி பாபிராஜு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் நேரடியாக சென்று, அங்கு பணியில் ஈடுபட்டுள்ள கோவில் ஊழியர்களின் நடவடிக்கைகளை பார்வையிட்டார். பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு செல்லும்போது அவர்களை பிடித்து தள்ளாமல் ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள்ள கோவில் துணை அதிகாரி சின்னம்காரி ரமணாவிடம் சில யோசனைகளை கூறினார்.
பெண் பக்தர்களை ஒழுங்குபடுத்த பெண் ஊழியர்களையும், ஆண் பக்தர்களை ஒழுங்குபடுத்த ஆண் ஊழியர்களையும் நியமிக்க அறங்காவலர் குழு தலைவர் உத்தரவிட்டார்.
மேலும் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் மேல் கை வைத்து ஜருகண்டி.. ஜருகண்டி என்று கூறி தள்ளி விடக் கூடாது. அதற்குப் பதில் கோவிந்தா.. கோவிந்தா' என கூறி மரியாதையுடன் வெளியே அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
பார்க்கலாம்... கோவிந்தா கோஷமாவது ஒர்க்அவுட் ஆகிறதா என்று!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications