சஸ்பெண்ட்டை எதிர்த்து 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் போட்ட வழக்கு.. சட்டசபை செயலாளருக்கு நோட்டீஸ்

சட்டசபையில் பிப்ரவரி 8ம் தேதி தேமுதிக எம்.எல்.ஏக்கள் பெரும் அடிதடியில் இறங்கினர். அதிருப்தி தேமுதிக உறுப்பினர் தமிழழகன் பேசிக் கொண்டிருந்தபோது அவர்கள் ஆவேசத்துன் அவரை அடிக்கப் பாய்ந்தனற். அதைத் தடுக்க முயன்ற இன்னொரு அதிருப்தி எம்.எல்.ஏவான மைக்கேல் ராயப்பன் அதில் சிக்கி அடி வாங்கினார்.
இதையடுத்து சட்டசபை உரிமைக் குழு விசாரணைக்கு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணை நடத்திய உரிமைக் குழு மார்ச் 25ம் தேதி அறிக்கை கொடுத்தது. அதன் அடிப்படையில் தேமுதிக கொறடா வி.சி.சந்திரகுமார், உறுப்பினர்கள் அனகை முருகேசன், பார்த்தசாரதி, பால அருள் செல்வன், செந்தில்குமார் ஆகியோர் ஒரு வருடத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதற்கு திமுக உள்ளிட்ட அத்தனை எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இது அரசியல் பழிவாங்கல் என அவை கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையைத் தொடர்ந்து சஸ்பெண்ட் காலம் 6 மாதமாக குறைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
இந்த நிலையில் சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து 6 எம்.எல்ஏக்களும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி ராஜேஸ்வரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டசபை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, தனிப்பட்ட முறையில் மனுதாரர்களும் நோட்டீஸ் அனுப்பலாம் என அறிவுறுத்தினார்.
பின்னர் விசாரணை ஏப்ரல் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications