சாப்பாடு போடலீங்க... அதனால் மருமகள வெட்டிக் கொன்னுபோட்டேங்க: 85 வயது மாமனார் பரபரப்பு வாக்குமூலம்
கோவை: சாப்பாடு போடாததால் மருமகளை வெட்டி கொன்றேன் என்று கைதான 85 வயது மாமனார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி, கூலி தொழிலாளியான இவரது மனைவி தெய்வாத்தாள் (45). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 7ம் தேதி தெய்வாத்தாள் வீட்டில் இருந்தார். அங்கு வந்த மாமனார் கருப்பண்ணன் (85), தெய்வாத்தாளை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினார்.
படுகாயம் அடைந்த தெய்வாத்தாளை கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.
இதுகுறித்து, அலங்கியம் போலீசார் கொலை வழக்கு பதிந்து கருப்பண்ணனை கைது செய்தனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ‘மருமகள் எனக்கு சாப்பாடு போடுவதில்லை. இதனால் பட்டினி கிடந்தும், ஓட்டலில் சாப்பிட்டும் சமாளித்து வந்தேன். அந்த ஆத்திரத்தில் கொலை செய்தேன்' என கூறியுள்ளார்.
இவரது மகன் கருப்பசாமி கூறுகையில், ‘தந்தைக்கு சொந்தமாக 75 சென்ட் இடம் உள்ளது. வட்டிக்கு பணம் விட்டு, அதில் வரும் வருமானத்தில் அவர்தான் ஓட்டலில் சாப்பிட்டு வந்தார். சாப்பாடு போட நாங்கள் மறுத்ததில்லை. எதற்காக கொலை செய்தார் என தெரியவில்லை என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications