தூக்கை ரத்து செய்யக் கோரும் புல்லர் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்!

1993-ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் 9 பேர் பலியாகினர். இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்த தேவேந்தர் பால்சிங் புல்லருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ரத்து செய்து தமக்கு கருணை கோரி 2003-ல் குடியரசுத் தலைவருக்கு மனு ஒன்றை அனுப்பியிருந்தார் புல்லர். ஆனால் அவரது கருணை மனுவை 2011-ஆம் ஆண்டில்தான் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்திருந்தார்.
கருணை மனுவை 8 ஆண்டுகள் காலதாமதமாக குடியரசுத் தலைவர் நிராகரித்ததால் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்றும் புல்லருக்கு சிறையில் மனநிலை சரியில்லை என்றும் அவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. .
இம்மனு மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், குடியரசுத் தலைவர் கருணை மனுவை தாமதமாக நிராகரிப்பதாலேயே தூக்கு தண்டனையைக் குறைகக் முடியாது. இந்த ஒரு காரணத்தாலே தூக்கு தண்ட்னையை ஆயுள் தண்டனையாக குறைக்க முகாந்திரம் எதுவும் இல்லை என்று கூறி புல்லரின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம். இருப்பினும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக் கூடிய ஒரு வாய்ப்பும் இருக்கிறது. அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தால் புல்லருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வாய்ப்பு இருக்கிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications