இரட்டை கொலை: மதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சதன் திருமலைக்குமார் மீது வழக்கு
நெல்லை: நெல்லை அருகே நடந்த இரட்டை கொலை தொடர்பாக ம.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ சதன் திருமலை குமார் உட்பட 16 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடையநல்லூரை அடுத்த சிங்கிலிபட்டி கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி, முருகேசன் இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதன்காரணமாக காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது இருதரப்பினரும் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பழனிச்சாமி தரப்பை சேர்ந்த குமார், கனி ஆகியோரை ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களால் நேற்று வெட்டி கொன்றது. அந்த கொலை சம்பவத்தை தடுக்க முயன்ற செல்லதுரை மற்றும் பிரவீன்குமாருக்கு பல இடங்களில் வெட்டு விழுந்தது.
பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் முருகேசன் தரப்பை சேர்ந்த வாசுதேவ நல்லூர் முன்னாள் ம.தி.மு.க. எம்.எல்.ஏ. சதன் திருமலை குமார் உள்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications