2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்- பாஜக கூட்டணிகள் மண்ணைக் கவ்வும்: கருத்துக் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கோ, பாஜக கூட்டணிக்கோ பெரும்பான்மை கிடைக்காது என்று தெரியவந்துள்ளது. காங்கிரசுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றும், அதே நேரத்தில் பாஜகவுக்கு பெரிய அளவில் இடங்கள் அதிகரிக்காது என்றும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மற்றும் CVoter ஆய்வு மையம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு கூறுகிறது.

மீண்டும் தொங்கு நாடாளுமன்றம்...

மீண்டும் தொங்கு நாடாளுமன்றம்...

இந்த இரண்டு கட்சிகள் தவிர்த்த பிற கட்சிகள் தான் பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களைப் பெறப் போகின்றன என்றும், மீண்டும் 1989ல் ஏற்பட்ட தொங்கு நாடாளுமன்றம் உருவாகி, மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த யாரோ ஒரு தலைவருக்கே பிரதமராகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 1989ம் ஆண்டில் விபி சிங்கின் தலைமையில் தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்தது நினைவுகூறத்தக்கது.

காங்கிரஸ் பலம் பாதியாக குறைந்தது...

காங்கிரஸ் பலம் பாதியாக குறைந்தது...

கடந்த 2006 நாடாளுமன்றத் தேர்தலில் 203 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி வரும் தேர்தலில் வெறும் 113 இடங்களிலேயே வெல்லும் என்று தெரிகிறது. கிட்டத்தட்ட அதன் பலம் பாதியாகக் குறையப் போகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அதிகபட்சம் 206 இடங்களே கிடைக்கும்.

விலைவாசி உயர்வு, ஊழல்கள், இலங்கை விவகாரத்தில் நடந்து கொண்ட விதம், தெலுங்கா விவகாரத்தில் ஏமாற்றல்கள் ஆகிய காரணங்களால் காங்கிரஸ் மீது மக்களிடையே மிகக் கடுமையான அதிருப்தி நிலவுகிறது.

பாஜகவுக்கும் நல்ல காலம் இல்லை...

பாஜகவுக்கும் நல்ல காலம் இல்லை...

அதே போல பாஜக கூட்டணி 184 இடங்களைப் பிடித்தாலே அதிகம் என்கிறது கருத்துக் கணிப்பு. இது கூட பிகாரில் நிதிஷ்குமார் பாஜகவுடன் இருந்தால் தான். அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சி கழன்று கொண்டால் பாஜக கூட்டணிக்கு 165 இடங்களே கிடைக்கும். பாஜக கூட்டணியைவிட்டு வெளியேற நிதிஷ்குமார் தயாராகிவிட்ட நிலையில், பாஜகவுக்கு அடுத்த தேர்தலிலும் மீண்டும் அடி காத்திருக்கிறது. தனிப்பட்ட முறையில் பாஜக 141 இடங்களில் வெல்லலாம். ஆனால், ஆட்சி அமைக்கும் அளவுக்கு அந்தக் கட்சிக்கோ அதன் கூட்டணி கட்சிகளிடமோ பலம் இருக்காது.

மொத்தத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கோ, பாஜக கூட்டணிக்கோ ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 272 எம்பிக்கள் கிடைக்கப் போவதில்லை.

பாஜகவுடன் சேராதவை...

பாஜகவுடன் சேராதவை...

மொத்தத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிகள், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் 83 இடங்களில் வெல்லும். இந்தக் கட்சிகள் எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி சேர மறுப்பவை.

அதே நேரத்தில் அதிமுக 27 இடங்களிலும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 19 வெல்லும். இந்தக் கட்சிகள் பாஜகவுடன் கூட்டணிக்குத் தயாராகவே உள்ளவை. ஆனால், மோடியை பிரதமராக அறிவித்தால் நிதிஷ் ஆதரவு கிடைக்காது. இப்போதுள்ள சூழலில் அது தான் நடக்கவும் போகிறது.

காங்கிரசுடன் சேராதாவை...

காங்கிரசுடன் சேராதாவை...

அதே போல தெலுங்கு தேசம், அஸ்ஸாம் கனபரிஷத், பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் 25 இடங்கள் வரை வெல்லலாம். இந்தக் கட்சிகள் எந்தக் காலத்திலும் காங்கிரசுடன் கூட்டணி சேராதவை ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+