பிரதமர் வேட்பாளரை பாஜக முடிவு செய்ய சிவசேனா எதிர்ப்பு! என்.டி.ஏ தீர்மானிக்க வலியுறுத்தல்!!
மும்பை: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை பாரதிய ஜனதா கட்சி மட்டுமே முடிவு செய்ய மற்றொரு கூட்டணிக் கட்சியான சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியில் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை முன்னிறுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. டெல்லியில் அண்மையில் நடைபெற்ற அதன் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து பகிரங்கமாகவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் பாரதிய ஜனதா கட்சி - ஐக்கிய ஜனதா தளம் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜகவின் மற்றொரு கூட்டணிக் கட்சியான சிவசேனாவும் நரேந்திர மோடிக்கு எதிராக போர்க் கொடி தூக்கியிருக்கிறது. சிவசேனாவின் ஏடான சாம்னாவில் இன்றைய தலையங்கத்தில் மோடி விவகாரத்தில் காட்டமான நிலையை சிவசேனா வெளிப்படுத்தியிருக்கிறது. அதில் மோடியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்துவதால் 5 முதல் 10 இடங்கள் பாஜகவுக்கு கூடுதலாக கிடைக்கலாம்.. ஆனால் பழைய கூட்டணிக் கட்சிகள் வெளியேறினால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 25 இடங்கள் வரை இழப்பு ஏற்படும். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக்க முடிவு செய்யலாம்.. ஆனால் இறுதி முடிவை தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஐக்கிய ஜனதா தளம் இந்த ஆண்டின் இறுதிக்குள் யார் பிரதமர் வேட்பாளர் என்பதை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் சிவசேனாவும் பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications