ஏம்ப்பா, குடிச்சு சீரழியிற? தட்டிக்கேட்ட மகளை எரித்துக் கொன்ற தந்தை- மீஞ்சூர் அருகே கொடூரம்
திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே பெற்ற மகளையே தீ வைத்து எரித்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்து இருக்கும் கேசவபுரத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். கொத்தனார். குடிப்பழக்கம் உள்ளவர். அவரது மனைவி மேரி. அவர்களின் மகள் நித்யா(19). ஜெய்சங்கர் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை மது வாங்க செலவிடுவார். வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதை அவரது மனைவியும், மகளும் தட்டிக் கேட்டதுடன் கண்டித்துள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நித்யாவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் ஜெய்சங்கர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதைப் பார்த்த மேரியும், நித்யாவும் அவரை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெய்சங்கர் மனைவி மற்றும் மகளை அடித்தார். மேலும் மகள் மீது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தார்.
தீ எரியத் துவங்கியதுடன் நித்யா அலறினார். இதையடுத்து ஜெய்சங்கர் அங்கிருந்து ஓடிவிட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து நித்யாவை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். முன்னதாக அவர் அளித்த மரண வாக்குமூலத்தில் தன்னை தன் தந்தை ஜெய்சங்கர் தான் தீ வைத்து எரித்தார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெய்சங்கரை கைது செய்தனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications