இந்திய நிஜாமின் விலைமதிப்பில்லா 'ரோஸ்' வைரம் அமெரிக்காவில் ஏலம்
நியூயார்க்: இந்திய அரச குடும்பத்தின் ரோஸ் நிற வைரம் அமெரிக்க ஏல நிறுவனத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்தியாவில், பண்டைய முகாலய சாம்ராஜ்யமாக விளங்கிய ஹைதராபாத் பகுதியை ஆட்சி புரிந்த நிஜாம் அரச குடும்பத்தினரின் சொத்தாக விளங்கிய அரிய வகை ரோஸ் நிற வைரம், நேற்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஏலத்தில் இடம் பெற்றது. 34.65 காரட் எடை கொண்ட இந்த வைரம், இந்தியாவின் கோல்கொண்டா சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்டிருக்கலாம் என்று அந்நிறுவனம் கருதுகின்றது.

எல்லாம் மன்னருக்கே சொந்தம்...
அந்நாளில் அங்கு கிடைத்த அரிய வகை பொக்கிஷங்கள் அனைத்தும் அரச குடும்பத்தினருக்கே சொந்தமாயின. பின்னர் அவை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

அப்போவே இவரு ’பிக்பி’...
1937ல் ஆட்சி புரிந்த நிஜாம் மன்னருக்கு இந்த வைரம் சொந்தமானதாக இருந்துள்ளது. அப்போதே உலகின் பெரிய பணக்காரர்களுள் ஒருவராக இவரை டைம் பத்திரிக்கை தேர்வு செய்தது.

பெரிய வம்சம்...
இவருக்கு பல்வேறு உறவு முறைகளில் மொத்தம் 149 குழந்தைகள் பிறந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனது...
1960களில் மக்களின் பார்வையில் இருந்து மறைந்த இந்த வைரம், தற்போது விற்பனைக்கு வந்துள்ளதாக கிறிஸ்டி ஏல நிறுவனம் தெரிவிக்கின்றது.

எல்லாம் ஒரு கல் வைரம் தான்...
கிறிஸ்து பிறப்பதற்கு 800 வருடங்களுக்கு முன்னால் வெட்டியெடுக்கப்பட்ட 242 காரட் எடை கொண்ட ஒரே கல்லில் இருந்துதான், தற்போது புழக்கத்தில் உள்ள நான்கு வைரங்களும் பிரிக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும், கல்லின் எடையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்த வைரம் அதிக விலை போகலாம் என்றும் அந்நிறுவனம் கருதுகின்றது.

அப்போ 44 மில்லியன். இப்போ..?
இதற்கு முன்னால் 2010ஆம் ஆண்டில் ஜெனீவாவில் விற்கப்பட்ட இந்த ரக வைரம் 44 மில்லியன் டாலருக்கு விலை போனது அதிகபட்ச விலையாகக் கருதப்பட்டது.












Click it and Unblock the Notifications