நமது மூதாதையரின் மூளை ஆரஞ்சு கலரில் இருந்ததாம்...
பாலி: நமது மூதாதையரின் ஒரு பிரிவினர் என்று வர்ணிக்கப்படும் இந்தோனேசியாவின் ஹாபிட் இனத்தவருக்கு மூளை ஆரஞ்சு நிறத்தில் இருந்ததாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மேலும் இந்த ஹாபிட் இனத்தவர்தான், மனித இனத்திலேயே முதன் முதலில் நிமிர்ந்து நடந்தவர்கள் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஹாபிட் இன மனிதர்களுக்கு ஹோமோ புளோரெசியன்ஸ் என்று பெயர்.

இந்தோனேசிய தீவில் உதித்த உருவம்...
ஹாபிட் இனத்தவர்கள் இந்தோனேசியாவின் கிழக்கு பாலி தீவுக்கு அருகே புளோரஸ் என்ற தீவில் நடமாடியுள்ளனர்.

பிக்மி யானைகள்.. பிரமாண்ட பாம்புகள்...
இந்தத் தீவில் பிக்மி எனப்படும் யானைகள், பெரிய கொமோடோ ரக பாம்புகளும் அப்போது இருந்துள்ளன.

திராட்சைக் கொத்து சைஸில் மண்டை ஓடு...
ஒரு பெரிய திராட்சைக் கொத்தை எடுத்துக் கொண்டால் எந்த வடிவில் இருக்குமோ அந்த அளவுக்கு இவர்களின் மண்டை ஓடு இருந்ததாம்.

முதல் மனிதனின் முதல் பிராஞ்ச்...
இந்த ஹாபிட் இனத்தவர், முதல் மனிதர்களிலிருந்து பிரிந்து வந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும், இவர்கள்தான் முதன் முதலில் நிமிர்ந்து, இரு கால்களாலும் நடந்தவர்கள் என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

உருவம் சிறிதுதான்....
இந்த ஹாபிட் இனத்தவர்கள் மிகவும் குள்ளமாக இருந்துள்ளனர். அதாவது இன்றைக்கு உள்ள 3 வயது சிறுவனின் உயரம் எவ்வளவு இருக்குமோ அந்த அளவுக்குத்தான் அவர்கள் அக்காலத்தில் இருந்துள்ளனர். ஒரு ஹாபிட் மனிதனின் மொத்த எடையே 25 கிலோதான்.

10 ஆண்டுக்கு முன்பு முதல் கண்டுபிடிப்பு...
10 வருடத்திற்கு முன்புதான் இவர்களின் எலும்புகள் கிடைத்து, இப்படி ஒரு குள்ளமான மனித உருவம் இருந்ததே தெரிய வந்தது.

மூளை மீது பிறந்த ஆர்வம்...
இதையடுத்து விஞ்ஞானிகள் உடனடியாக இந்த மனிதர்களின் மூளை குறித்த ஆய்வுகளில் கவனம் செலுத்தினர்.

ஆப்பிரிக்கா, ஆசியா முழுவதும்...
இந்த வகை மனிதர்கள் ஆசியாவின் பல பாகங்களிலும், ஆப்பிரிக்காவிலும் இருந்துள்ளனர். துருக்கி முதல் சீனாவரையிலும் இவர்களின் நடமாட்டம் இருந்துள்ளது.

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்...
உருவத்தில் குள்ளமானவர்களாக இருந்தாலும் கூட இந்த ஹாபிட் மனிதர்கள் தற்போதைய மனிதர்களை விட அதாவது ஹோமோ சேபியன்ஸ், பலசாலிகளாக இருந்துள்ளனர். ஆனால் நமது மூளையைப் போல இவர்களது மூளை இல்லை.

ஒரே ஒரு எலும்புக் கூடு...
தற்போது புளோரஸ் தீவில் ஒரே ஒரு பெண் ஹாபிட் இனப் பெண்ணின் முழுமையான எலும்புகள் சிக்கியுள்ளன. 18,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் எலும்புகள் இவை என்று கூறப்படுகிறது. மண்டை ஓட்டின் மேல் பகுதி, தாடைப் பகுதி, இடுப்பு, சில கால் எலும்புகள் சிக்கியுள்ளன.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications