பாஸ்டன் குண்டுவெடிப்பு: குக்கர் குண்டு வைப்பவர்களை வலை வீசித் தேடும் எஃப்.பி.ஐ.
பாஸ்டன்: பாஸ்டனில் வெடிகுண்டை பேக் பண்ண பயன்படுத்தப்படும் குக்கர்களின் பாகங்கள் கிடைத்துள்ளதாகவும், இதை வைத்தவர்கள் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் பாஸ்டன் எஃப்.பி.ஐ. அலுவலக தலைவர் ரிக் டீ லாரியர்ஸ் தெரிவித்துள்ளார்.
பாஸ்டனில் நடந்த மாரதான் போட்டி முடியும் இடத்தில் 2 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 3 பேர் பலியாகினர், 180 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து எஃப்.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இது குறித்து பாஸ்டன் எஃப்.பி.ஐ. அலுவலக தலைவர் ரிக் டீ லாரியர்ஸ் கூறுகையில்,
பாஸ்டனில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் குண்டுகளை பேக் பண்ண பயன்படும் குக்கர் பாகங்கள் கிடந்தன. அவற்றை நிபுணர்கள் ஒன்று சேர்த்துள்ளனர். இது போன்ற குண்டுகள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தப்படுகின்றன.
வெடிகுண்டுகளை எடுத்து வர பயன்படுத்தப்பட்ட கருப்பு நைலான் பைகளின் துண்டுகள் கிடைத்துள்ளன என்றார்.
இந்த குண்டுகளில் சிறு சிறு மெட்டல் துண்டுகள், கூரிய நுனி உள்ள ஆணி போன்ற பொருட்கள் அதிக அளவில் இருந்துள்ளன. குண்டுகள் வெடித்ததில் இவை மக்களின் உடல்களில் பாய்ந்தன என்று டாக்டர் ஜார்ஜ் வெல்மஹாஸ் தெரிவித்தார்.
மாரதான் பந்தயத்தில் கலந்து கொண்ட தனது தந்தையை பார்க்க எல்லை கோடு அருகே நின்ற 8 வயது சிறுவன் மார்ட்டின் ரிச்சர்ட் குண்டுவெடிப்பில் பலியானான். அவனது தாய்க்கு மூளையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சகோதரி ஒரு காலை இழந்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications