டெல்லியில் இன்னொரு அதிர்ச்சி: 10ம் வகுப்பு மாணவியை காரில் கடத்தி கற்பழிப்பு
டெல்லி: பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை மூன்று பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திப் போய் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்தாலும், டெல்லியில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில் இப்போது பள்ளி மாணவி ஒருவர் ஓடும் காரில் மூன்று பேரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிக்குச் சென்ற அந்த மாணவியை 3 பேர் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தெற்கு டெல்லியில் உள்ள சரோஜினி நகரில் சாலையோரம் காரை நிறுத்தி, அந்த மாணவியை கீழே தள்ளிவிட்டனர். அப்போது, போலீசில் சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர். மற்ற இரண்டுபேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
டெல்லியில் கடந்த ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில், 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தையடுத்து, பெண்கள் பாதுகாப்பை பலப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் மாணவி ஒருவர் மூன்று பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications