இறந்த பெண்ணின் கர்ப்பப் பையை தானமாக பெற்று கர்ப்பமடைந்த துருக்கி பெண்!
இஸ்தான்புல்: உலகிலேயே முதல் முறையாக கர்ப்பப் பை மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்த பெண், அது முடிந்து 2 ஆண்டுகள் கழித்து தற்போது அப்பெண் கர்ப்பமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தாய்மை கடவுள் பெண்களுக்களித்த வரம். தாய் வரமாக வந்த கடவுள் என்றெல்லாம் கூறுவார்கள். ஒரு பெண் தாய்மை அடையும் போது தான் முழுமை அடைகிறாள் என நம்பப்படுகிறது. ஆனால், அறிவியல் உலகமோ 5000ல் ஒரு பெண் பிறவியிலேயே கர்ப்பப்பை இன்றி பிறக்கிறாள் எனக் கூறுகிறது.
ஒரு மரணமடைந்த பெண்ணின் கர்ப்பப் பையை எடுத்து கர்ப்பப்பை இல்லாத தெர்யா சேர்த் என்ற அந்த 22 வயதுப் பெண் ணுக்கு பொருத்தினர் டாக்டர்கள். தற்போது அந்தக் கர்ப்பப் பை மூலம் அப்பெண் தாய்மையடைந்துள்ளார்

பிறக்கும் போதே இல்லை...
தெர்யாவுக்கு பிறவியிலேயே கர்ப்பப் பை கிடையாது. இதனால் அவர் அடைந்த மன வேதனைக்கு அளவே இல்லை. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இறந்த பெண் ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்ட கர்ப்பப் பை பொருத்தப்பட்டது.

வெற்றி... வெற்றி
ஆப்பரேஷன் வெற்றிகரமாக நடந்தது. அதன் பின்னர் அவர் சோதனைக் குழாய் மூலம் குழந்தைப் பேறுக்காக முயற்சித்து வந்தார். தற்போது அதில் வெற்றி கிடைத்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
தெர்யா நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும், அவருக்கு சோதனைக் குழாய் கருத்தரிப்பு நடவடிக்கை வெற்றியில் முடிந்துள்ளதாகவும் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ஆல் இஸ் வெல்...
இதுகுறித்து தெர்யாவின் டாக்டரான முஸ்தபா உனால் கூறுகையில், தெர்யா நல்ல நலமுடன் உள்ளார். குழந்தைப் பேறை எதிர்நோக்கியுள்ளார்.தாய்மையின் தொடக்க நிலையில் அவர் இருக்கிறார். எல்லாம் நல்லபடியாக முடியும் என்று நம்புகிறோம் என்றார்.

கர்ப்பப்பை பொருத்தப்பட்ட முதல் பெண்...
கடந்த 2000மாவது ஆண்டில் சவூதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கர்ப்பப் பை மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதனால் 90 நாட்களில் அதை எடுக்க நேரிட்டது. இந்த நிலையில் தெர்யாதான் உலகிலேயே முதன் முதலில் வெற்றிகரமாக கர்ப்பப் பை பொருத்தப்பட்ட பெண் என்ற பெயரைப் பெற்றார்.

5000ல் ஒருத்தியம்மா... நீ!
உலக அளவில் 5000 பெண்களில் ஒருவர் கர்ப்பப் பை இல்லாமல் பிறக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்லமே... செல்லம்
தெர்யாவின் கணவர் பெயர் முஸ்தபா சேர்த். இவருக்கு வயது 35 ஆகிறது. கணவரும், மனைவியும் தற்போது தங்களது முதல் செல்லத்தை எதிர்பார்த்து ஆவலோடும், பதைபதைப்போடும் காத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications