பாஸ்டன் குண்டுவெடிப்பு: 2வது தீவிரவாதி போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் படுகாயம்- கைது

செசன்யா அருகே உள்ள ரஷ்ய பகுதியைச் சேர்ந்த தமேர்லான் சர்னயேவ் (26), ஷோக்கர் (19 இருவரும் கல்வி பயில சில வருடங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு வந்தவர்கள்.
இந்த இருவரும் தான் கடந்த திங்கள்கிழமை நடந்த மாராதான் போட்டியில் வெடிகுண்டு வைத்தவர்கள். சிசிடிவில் பதிவான இந்த இருவரின் படங்களையும் எப்பிஐ வெளியிட்டு இருவரையும் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இருவரும் வாட்டர்டவுன் பகுதியில் காரில் வந்த ஒருவரை துப்பாக்கி முனையில் வழிமறித்து அவரை காருடன் கடத்தினர்.
பின்னர் காரில் இருந்தவரை இறக்கிவிட்டுச் சென்றனர். இந்த விவரம் அறிந்த போலீசார் அந்தக் காரை விரட்டிச் சென்றபோது, இருவரும் காரில் இருந்து வெடிகுண்டுகளை வெளியே வீசினர். இதையடுத்து எப்பிஐயும் போலீசாரும் அந்தக் காரை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் காரில் இருந்த தமேர்லான் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆனால், ஷோக்கர் தப்பிவிட்டார். இதையடுத்து இவரைத் தேடி வாட்டர்டவுன் பகுதியில் வீடுவீடாக சோதனை நடந்தது. நேற்றிரவு வாட்டர்டவுனின் பிராங்ளின் தெருவில் உள்ள ஒரு வீட்டின் பின் பகுதியில் ஆற்றுப் பகுதியில் ஒரு படகில் இவர் பதுங்கியிருந்தார்.
அவரை போலீசார் சுற்றி வளைத்தபோது அவர் துப்பாகியால் சுட்டார். இதையடுத்து போலீசார் திருப்பிச் சுட்டதில் காயமடைந்த அவர் பிடிபட்டார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள அவரிடம் விசாரணை நடத்தினால் தான் இந்தத் தாக்குதலுக்கான காரணங்கள் குறித்த விவரங்கள் வெளியே வரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications