மே 4 வரை முஷரப்புக்கு சிறை: தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவு!

2007-ம் ஆண்டு, முஷரப் தனது ஆட்சியின்போது அவசர நிலையை அமல்படுத்தி 60 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தார். இது தொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் ஏற்கெனவே இடைக்கால ஜாமீன் பெற்றிருந்த முஷரப் அதனை மேலும் நீட்டிப்பதற்காக வெள்ளியன்று உயர் நீதிமன்றத்துக்கு சென்றார். ஆனால், அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
முஷரப்பை உடனடியாக கைது செய்யும்படி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவை செயல்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்கும் முன்னர், முஷரப்பை அவரது பாதுகாவலர்கள் அவசர அவசரமாக காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
நீதிமன்றத்தில் இருந்து தப்பிய முஷரப் இஸ்லாமாபாத் புறநகர் பகுதியான சக் ஷாஸாத் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டுக்குச் சென்றார். அவரை கைது செய்வதற்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். சற்று நேரத்திற்கு பின்னர் முஷரப் கைது செய்யப்பட்டார்.
'முஷரப்பை போலீஸ் காவலில் எடுத்து 2 நாட்களுக்குள் தீவிரவாத (தடுப்பு) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்' என்று நீதிபதி சவுக்கத் அஜஸ் சித்தீக்கி உத்தரவிட்டார். சக்ஷாஜத் நகரில் உள்ள முஷரப்பின் பண்ணை வீடு கிளைச் சிறையாக அறிவிக்கப்பட்டது.
இன்று காலை தீவிரவாத (தடுப்பு) நீதிமன்றத்தில் முஷரப் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, முஷரப்பை மே 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி கவுசர் அப்பாஸ் சைதி உத்தரவிட்டார். இதனையடுத்து முஷரப் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications