மார்த்தாண்டத்தில் போதையில் எஸ்ஐக்கு 'பளார்' விட்ட துணை நடிகர் கைது
குமரி: மார்த்தாண்டத்தில் குடி போதையி்ல் எஸ்ஐயின் கன்னத்தில் அறை விட்ட துணை நடிகரை போலீசார் கைது செய்தனர்.
மார்தாண்டம் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் சுந்தர்ராஜ். இரவு ரோந்து பணியின் போது மார்க்கெட் சாலை பகுதியில் போதையில் வாலிபர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை கண்டார். அதை தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்து அவரை அங்கிருந்து போகுமாறு கூறினார். அந்த வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் ஓங்கி பளாரென அறைந்தார். இது குறித்து எஸ்ஐ காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அந்த வாலிபரிடம் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் புதுக்கடை அருகே விழுந்தியம்பலம் குஞ்சாக்கோடையைச் சேர்ந்த சிபு என்பதும், துணை நடிகர் என்பதும் தெரிய வந்தது. மேலும் தூத்துக்குடியில் ஒரு சினிமா படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு வந்தவர் நண்பருடன் சேர்ந்து மது அருந்தியதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சிபுவை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அவரது நண்பர் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications