டெல்லியில் 5 வயது சிறுமியை கற்பழித்த கொடூரன் திருமணத்திற்கு முன்பு மனைவியை கெடுத்தவன்
டெல்லி: டெல்லியில் 5 வயது சிறுமியை கற்பழித்த மனோஜ் குமார் திருமணத்திற்கு முன் தனது மனைவியை கற்பழித்தவர் என்று தெரிய வந்துள்ளது.
கிழக்கு டெல்லி காந்தி நகரைச் சேர்ந்த 5 வயது சிறுமியை கற்பழித்து தாக்கிய மனோஜ் குமார்(22) நேற்று முன்தினம் பீகாரில் வைத்து கைது செய்யப்பட்டார். சிறுமியை கடத்தி கற்பழித்துவிட்டு பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் சிட்கௌனா கிரமாத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்ற மனோஜ் போலீசில் சிக்கினார்.
போலீசார் மனோஜை விமானம் மூலம் டெல்லி கொண்டு வந்தனர். இந்நிலையில் மனோஜ் திருமணத்திற்கு முன்பு தனது மனைவியை கற்பழித்தது தெரிய வந்துள்ளது. கற்பழித்ததால் அந்த பெண்ணை பஞ்சாயத்து உத்தரவின்பேரில் மணந்தார். தற்போது சிறுமியை கற்பழித்தது பற்றி தெரிந்தும் மனோஜை விடுதலை செய்யுமாறு அவரது மனைவி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் மனோஜை தூக்கில் போட வேண்டும் என்று சிட்கௌனா கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மனோஜ் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பர்துவாவை சேர்ந்தவர். டெல்லி சம்பவம் பற்றி அறிந்ததும் மனோஜ் குமார் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க பஞ்சாயத்து முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications