விஜயகாந்த் வீட்டு முன்பு சரிதா தர்ணா: காதலித்து கைவிட்டதாக புகார்
கரூர்: கரூரில் தன்னை கைவிட்ட காதலன் வீட்டுக்கு முன்பு அமர்ந்து காதலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகில் உள்ள தாளப்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகாந்த் (29). தரகம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். விஜயகாந்த்தும் மாவத்துரையைச் சேர்ந்த பழனியப்பன் மகள் சரிதாவும்(29) காதலித்துள்ளனர். இந்நிலையில் விஜயகாந்த் சரிதாவை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றுள்ளார்.
இது குறித்து அறிந்த சரிதா கரூர் கலெக்டர் ஜெயந்தியிடம் நியாயம் கேட்டு மனு கொடுத்தார். சரிதாவின் மனு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் குளித்தலை மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார் விஜயகாந்த் மற்றும் சரிதா குடும்பத்தாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சரிதாவை திருமணம் செய்துகொள்வதாக விஜயகாந்த் உறுதியளித்தார்.
ஆனால் அவருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த சரிதா நேற்று முன்தினம் மாலை முதல் விஜயகாந்த் வீட்டுக்கு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து சரிதாவை சமாதானப்படுத்தினர்.
விஜயகாந்துக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்கும் முயற்சிகள் கைவிடப்பட்டுவிட்டது என்றும், உங்களுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் சரிதாவிடம் தெரிவித்தனர். அதன் பிறகே அவர் போராட்டத்தை கைவிட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications