கோடை வெயில்: அகஸ்தியர் அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
நெல்லை: கோடை வெயிலிலும் தண்ணீர் குறையாமல் கொட்டுவதால் பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக கத்தரியை மிஞ்சும் வெயில் கொளுத்தி வருகிறது. போதிய மழை இல்லாததால் நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் நீர் நிலைகளை தேடி அலைந்து வருகின்றனர். நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பல அருவிகள் உள்ளன. களக்காடு மலைப் பகுதிகளில் உள்ள அருவிகளில் மழைக்காலங்களில் மட்டுமே தண்ணீர் கொட்டும். குற்றால அருவிகளில் சீசன் காலங்களில் மட்டுமே தண்ணீர் விழும். ஆனால் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, பாணதீர்த்த அருவி போன்றவைகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும்.
பாணதீர்த்த அருவிக்கு பாபநாசம் அணை வழியாக செல்ல படகு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் அங்கு குளிக்க அனுமதியில்லை. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் அகஸ்தியர் அருவியில் குளிக்க மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து கூட்டம் அலைமோதி வருகிறது. ஆனால் இங்கு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் குளிக்கின்றனர். இதனால் பிரச்சனை ஏற்படும் கட்டத்தில் அகஸ்தியர் அருவி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications