156 ஆண்டுகள் கம்பி எண்ணப் போகும் 23 போலீசார்: பிரேசிலில் வினோதம்

Subscribe to Oneindia Tamil

சாவ்பாலோ: பிரேசில் நாட்டில் கைதிகளை கொன்றதாக கூறி, 23 போலீசாருக்கு தலா 156 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் சாவ்பாலோ நகரில் மத்திய சிறை உள்ளது. கடந்த 1992-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி சிறைக்குள் கலவரம் நடந்தது. அப்போது கைதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் சண்டையும், தீவைப்பு சம்பவமும் நடந்தது.

இந்த நிலையில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 111 கைதிகள் பரிதாபமாக இறந்தனர். போலீசார் தங்களை காப்பாற்றி கொள்ளவே துப்பாக்கியால் சுட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் சரணடைந்த கைதிகளை அறைகளில் அடைத்து வைத்து சுட்டு கொன்றதாக எதிர் தரப்பில் விவாதிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சாவ்பாலோ கோர்ட்டில் நடந்து வந்தது. அதில் 23 போலீஸ் அதிகாரிகள், 3 ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 26 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி தலா 156 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் 3 ராணுவ அதிகாரிகள் மட்டும் விடுதலை செய்யப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+