விமரிசையாக நடந்த மதுரை மீனாட்சி- சொக்கநாதர் திருக்கல்யாணம்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மனுக்கும், சொக்கநாதருக்கும் இன்று காலை திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மதுரையில் சித்திரைத் திருவிழா துவங்கி நடந்து வருகிறது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்றது. காலை 8.17 மணியில் இருந்து 8.41க்குள் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது.
சொக்கநாதராக செயல்பட்ட பட்டர் திருமாங்கல்யத்தை எடுத்து மீனாட்சி அம்மனாக செயல்பட்ட பட்டரிடம் கொடுத்தார். அவர் அதை அம்மன் கழுத்தில் அணிவித்தார். இந்த திருக்கல்யாணத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர். திருக்கல்யாணத்தையொட்டி கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த தடைவிதிக்கப்பட்டதுடன் போக்குவரத்தும் மாற்றியமைக்கப்பட்டது. இன்று இரவு மீனாட்சி அம்மனும், சொக்கநாதரும் மாசி வீதிகளில் பூப்பல்லக்கில் வலம் வருகின்றனர். இதைத் தொடர்ந்து நாளை காலை மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. இன்று மாலை கள்ளழகர் அழகர் கோவிலில் இருந்து புறப்படுகிறார். நாளை காலை மூன்று மாவடி அருகே எதிர்சேவை நடைபெறுகிறது.
<center><center><img style="-webkit-user-select:none;border:0px;" border="0" width="1" height="1" src="http://web.ventunotech.com/beacon/vtpixpc.gif?pid=2&pixelfrom=jp" /> <div id="vnVideoPlayerContent"></div> <script> var ven_video_key="MTMwNTYzfHwyfHwxfHwxLDEsMQ=="; var ven_width="650"; var ven_height="417"; </script> <script type="text/javascript" src="http://ventunotech.com/plugins/cntplayer/ventuno_player.js"></script></center></center>
இதையடுத்து நாளை மறுநாள் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அழகர் ஆற்றில் இறங்குவதையொட்டி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் வைகை ஆற்றில் ஓடுவது மதுரை மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!













Click it and Unblock the Notifications