நீலகிரி மாவட்டத்தில் ரூ. 7,000 கோடியில் 2,000 மெகாவாட் மின் நிலையம்:
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் 2 x 800 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையம் அமைக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்றால் தான் தமிழகம் தலை சிறந்த மாநிலமாக விளங்க முடியும் என்பதை நன்கு உணர்ந்துள்ள எனது தலைமையிலான அரசு, அதனை எய்தும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள மின் திட்டங்களை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
நீலகிரி மாவட்டத்தில், 7,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,000 மெகாவாட் மின் திறன் கொண்ட சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் உருவாக்கப்படும். இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும்.
சுரங்க நீர்வழித்தடம்:
முதற்கட்டமாக, குந்தா நதியின் துணை நதியான சில்லஹல்லா ஆற்றின் குறுக்கே, 90.8 மீட்டர் உயரத்திற்கு 2.25 டி.எம்.சி. அடி கொள்ளளவு கொண்ட சில்லஹல்லா மேல் நீர்த்தேக்கம் நிறுவப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ள 5.5 டி.எம்.சி அடி கொள்ளவு கொண்ட அவலாஞ்சி எமரால்டு நீர்த்தேக்கங்களுடன் இணைக்கப்படும். இதனை இணைப்பதற்காக 2,750 மீட்டர் நீளமுடைய சுரங்க நீர்வழித்தடம் அமைக்கப்படும்.
இரண்டாவது கட்டமாக, உத்தேசிக்கப்பட்டுள்ள சில்ல ஹல்லா நீர்த் தேக்கத்திற்கும், பில்லூர் நீர்தேக்கத்திற்கும் இடையே உள்ள 1,500 மீட்டர் உயரத்தைப் பயன்படுத்தி 2,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக் கூடிய மின் நிலையம் அமைக்கப்படும்.
இரவு நேர உபரி மின்சாரத்தைப் பயன்படுத்தி நீர் ஏற்றத் திட்டம்:
இந்த மின் நிலையம் நிலத்தடி மின் நிலையமாக, அமையும். மின் உற்பத்திக்குப் பின் உபயோகப்படுத்தப்பட்ட நீர், கடைவாயில் சுரங்கம், வழியாக பில்லூர் நீர்த் தேக்கத்தை அடையும். நிலத்தடி மின் நிலையத்தை அடைய அணுகு சுரங்க வழி அமைக்கப்படும். இத்திட்டம் நிறைவு பெற சுமார் 8 முதல் 10 ஆண்டுகள் ஆகும்.
மேலும் இத்திட்டம், அதிகரித்து வரும் காற்றாலை மின் உற்பத்தி, நிறுவப்படவுள்ள சூரிய மின் உற்பத்தி மற்றும் இரவு நேரங்களில் அனல் மற்றும் அணு மின் நிலையங்களில் மிகையாகக் கிடைக்கப் பெறும் மின்சாரத்தை சேமித்து வைக்கும் விதமாக, இந்த உபரி மின்சாரத்தைப் பயன்படுத்தி கீழ் நீர்த் தேக்கத்திலிருந்து மேல் நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏற்றி வைக்கப்படும். அவ்வாறு ஏற்றித் தேக்கப்பட்ட நீரையே பயன்படுத்தி உச்ச மின் தேவை காலங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications