குஜராத்தின் வளர்ச்சிக்கு நான் காரணம் அல்ல.. 6 கோடி குஜராத்திகளே காரணம்: நரேந்திர மோடி

Subscribe to Oneindia Tamil

Narendra modi
ஹரித்வார்: குஜராத்தின் மாநிலத்தின் வளர்ச்சிக்கு நான் காரணம் அல்ல.. 6 கோடி குஜராத்திகளே காரணம் என்று அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தர்காண்ட் மாநிலத்தின் ஹரித்வார் நகரில் யோகா குரு பாபா ராம்தேவ்-ன் ஆச்சார்ய்குலம் பள்ளியை நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சாதுக்களான மொராரி பாபு, ரமேஸ்ஜி ஓஜா போன்ற முக்கிய இந்து மதசாதுக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சாதுக்கள் உரையாற்றிய பின்னர் நரேந்திர மோடி சிறைப்புரையாற்றினார். அவர் தமது உரையில், கும்பமேளா எப்போது நடைபெற்றாலும் அதில் நான் கலந்து கொள்வேன். ஆனால் இந்த முறை என்னால் கலந்து கொள்ள முடியாமல் போனது. அந்த இழப்பை தற்போது இன்றைய நிகழ்வின் மூலம் ஈடுசெய்துவிட்டேன். சாதுக்கள் என்பவர்கள் நம்மை வழிகாட்டும் குருக்கள். அவர்களுக்கு நாம் கீழ்படிந்தாக வேண்டும். எந்த ஒருசாதும் தமக்காக என்று எவரிடமும் கையேந்த மாட்டார்கள்.

பாபா ராம்தேவை நான் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே அவர் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த காலம் தொட்டு அறிவேன். யோகா வகுப்புகள் மூலம் பல லட்சம் பேருக்கு இன்று அவர் குரு. பாபா ராம்தேவின் இயக்கத்தைப் போல வேறு ஒருநாட்டில் விரிவடைந்திருந்தால் ஒரு இயக்கம் நடைபெற்றிருக்குமேயானால் பல்வேறு கல்வி நிறுவனங்களில் அவர் ஒரு பாடமாக இருந்திருப்பார். அவர் பெயரை பல கல்வி நிறுவனங்கள் தாங்கியிருக்கும்... பாபா ராம்தேவின் சாதனைகள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும். என்னை எப்போதுமே ஆன்மீகப் பாதைதான் வழி நடத்துகிறது. நேரம் கிடைக்கும் போது பேளூர் மடத்துக்குப் போய் சாதுக்களுடன் உரையாடுவேன். அண்மையில் கூட நாராயண குருவின் தேசமான கேரள மாநிலத்துக்குச் சென்று இருந்தேன். கேரள மாநிலத்தின் கல்வி அறிவு விகிதம் அதிகமாக இருப்பதற்கு காரணம் குருக்களின் ஆசீர்வாதம்தான்.

சுவாமி விவேகானந்தர் மற்றும் அரவிந்தரின் கனவுகளை நாம் நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறோம். ஹரித்துவாரைப் பொறுத்தவரையில் சாதுக்கள் சுயநலமின்றி பசியோடு வரும் அனைவருக்கும் உணவிடுகின்றனர். இந்த நாட்டில் ஒருவருக்கு எதிராக கருத்துகளை முன்வைப்பது குற்றமா? டெல்லி ராம்லீலா மைதானத்தில் ராம்தேவ் போராட்டம் நடத்திய போது போலீஸ் தாக்குதலில் ராஜ்பாலா உயிரிழந்தார். இதற்கு யாரிடம் நாம் கேள்வி கேட்பது?

இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி பிறந்தது என்று பலர் தவறாக கருதிக் கொண்டிருக்கின்றனர். அப்படி நினைப்பவர்கள் வரலாற்று பாரம்பரியத்தைப் புறக்கணித்துவிடுகின்றனர். இந்த சமூகமானது தமது அடித்தளமான பாரம்பரியத்தில் இருந்து தம்மை துண்டித்துக் கொண்டிருக்கிறது. இந்திய சமூகமானது நோய் பீடித்திருக்கிறது. இதை சீர்திருத்தங்கள் மூலமே சீரமைக்க முடியும்.

நான் ஒரு நம்பிக்கையுள்ள மனிதன்...2001 ஆம் ஆண்டு குஜராத் நிலநடுக்கத்துக்குப் பிறகு நாங்கள் மீண்டு எழ முடியாது என்று சொன்னார்கள்.அதை கடவுள் எங்களுக்குக் கொடுத்த ஒரு சோதனையாக கருதினோம். ஆனால் 3 ஆண்டுகளில் மீண்டெழுந்தோம். இப்பொழுது குஜராத்தின் வளர்ச்சியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்..ஆனால் நான் நிச்சயமாக இதற்கு பொறுப்பானவன் இல்லை.. இல்லை..இல்லை... இதற்கு குஜராத் மாநில 6 கோடி மக்கள் மட்டும்தான் காரணம்... கடந்த 12 ஆண்டுகளில் இதுவரை எந்த ஒரு மத மோதலும் குஜராத்தில் நடைபெற்றது இல்லை. ஏனெனில் எனது அரசாங்கம் அனைத்து சமூக மக்களும் பயன்பெறுகிற வகையிலான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது..

நாடின் யோகா பாரம்பரியத்தைக் காப்பாற்றி வரும் பாபா ராம்தேவின் பதஞ்சலி யோகாபீடத்தின் சேவைகள் பாராட்டுக்குரியவை.. சாதுக்கள் என்னைப் பாராட்டுவது என்பது ஒரு குழந்தை நடப்பதைப் பார்த்து தாய் எப்படி மகிழ்கிறதோ அதுபோல்தான் சாதுக்களை ஒரு தாயாக நான் கருதுகிறேன். ஹரித்வாரில் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கான கல்வி மேம்பாட்டுப் பணிகளை மிகப் பெரிய அளவில் சாதுக்கள் மேற்கொண்டு வருவதற்கு பாராட்டுகள் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+