பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த கார் குண்டு கண்டுபிடிப்பு: தவறுதலாக கைதான 3 இந்தியர்கள் விடுதலை
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு சதி முறியடிக்கப்பட்டது. சதிகாரர்கள் என கைது செய்யப்பட்ட 3 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கலாபர்சான் பிராந்தியத்தில் மகர்லிகா நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த காரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டு இருந்தது போலீசாரால் கண்டுபிடிக்கப் பட்டது. ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ‘கிரேடு சி4' ரகத்தை சேர்ந்த சக்தி வாய்ந்த வெடிபொருளால் தயாரிக்கப்பட்ட அந்த நவீன குண்டு, கார் என்ஜினில் பொருத்தப்பட்டு, செல்போன் மூலம் அதை இயக்கி வெடிக்க சதித்திட்டம் தீட்டப்பட்டு இருந்ததாக தெரிகிறது.
ஆனால், செல்போனில் இருந்த பேட்டரி நழுவியதால், அச்சதி நிறைவேறவில்லை. பின் வெடிக்காத அந்த குண்டை போலீசார் கைப்பற்றி செயல் இழக்க வைத்தனர். விசாரணையில், அந்த வெடிகுண்டை மறைத்து வைத்தது இந்தியாவைச்சேர்ந்த நரேந்தர்சிங், ரஜெத்குமார், ஜஸ்பீர்சிங் ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரும் ஜான்பெனிடோ நகரில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
முதலில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின் காரை சரி செய்வதற்காக விடப்பட்ட ஒர்க்ஷாப்பில் தான் தவறு நடந்திருக்கிறது என வக்கீல்கள் நிரூபித்தப்பின் வழக்கை திரும்பப் பெற்று கைது செய்த மூவரையும் விடுதலை செய்தது போலீஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications