திருவள்ளூரில் விஷவாயு தாக்குதல்- வெளிமாநில தொழிலாளர் இருவர் உட்பட மூவர் பலி
திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியில் குழாய் அமைக்கும் பணிக்காக பாதாள சாக்கடைக்குள் இறங்கிய மேற்கு வங்க மாநிலத் தொழிலாளர்கள் இருவர் உட்பட 3 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவள்ளூர் நகராட்சியில் சென்னை - திருத்தணி சாலையில் பாதாள சாக்கடை இருந்ததால் நள்ளிரவு நேரத்தில் குழாய் இணைக்கும் பணி நடந்தது. இன்று அதிகாலை 1.30 மணி அளவில் பாதாள சாக்கடை மூடியை தொழிலாளர்கள் அகற்ற்விட்டு முதலில் சாக்கடை ஆழத்தை கணக்கிட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சேர்ந்த திலிப் என்பவர் இறங்கினார். அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.
இதனால் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மற்றொரு தொழிலாளி பிந்து என்பவர் இறக்கிவிடப்பட்டார். அவரும் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதைத் தொடர்ந்து மேல்மலையனூர் முருகன் என்ற தொழிலாளி இறக்கிவிடப்பட்டு வெகுநேரமாகியும் அவரும் வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சிய அடைந்த மற்றவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கவச உடை அணிந்து சாக்கடைக்குள் இறங்கிய போது மூவரும் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
3 பேர் உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விஷ வாயு தாக்கி 3 பேரும் பலியாகி இருக்கலாம் என கருதப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications