மே 9ல் பிளஸ் 2 ரிசல்ட்- மே 31ல் 10ம் வகுப்பு ரிசல்ட்: தமிழக அரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Exam results
சென்னை: பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ரிசல்ட் மே 9-ந் தேதியன்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ரிசல்ட் மே 31-ந் தேதியன்றும் வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு இன்று வெளிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தேர்வு முடிவுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகம், புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ந் தேதி தொடங்கி மார்ச் 27-ந் தேதி வரை நடைபெற்றது. இத் தேர்வில் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 பேர் எழுதினர். 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ந் தேதியன்று வெளியிடப்படுகிறது.

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27-ந் தேதியன்று தொடங்கி ஏப்ரல் 12-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 11,359 பள்ளிகளை சேர்ந்த 10 லட்சத்து 69501 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதற்காக 3013 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5 லட்சத்து 43 ஆயிரத்து 511 மாணவர்களும், 5 லட்சத்து 25 ஆயிரத்து 990 மாணவியரும் எழுதியிருந்தனர். இவர்களுக்கான தேர்வு முடிவு மே 31-ந் தேதியன்று வெளியிடப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+