'அம்மா உணவகத்திற்கு' பெரும் வரவேற்பு: மேலும் 800 உணவகங்கள் திறக்க முடிவு!

Subscribe to Oneindia Tamil

Amma Mess
சென்னை: 1ரூபாய் இட்லி... 5 ரூபாய் சாம்பார் சாதம் என மக்களின் பசியாற்றி வரும் அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் மாநகராட்சியில் ஏழை தொழிலாளர்களுக்காகவும், மக்களுக்காவும் 200 வார்டுகளில் 200 உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த உணவகங்களில் இட்லி ரூ.1-க்கும், சாம்பார் சாதம் ரூ.5-க்கும் தயிர்சாதம் ரூ.3-க்கும் விற்கப்படுகிறது. இதற்கு எல்லா தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 2 மாதங்களில் 1 கோடிக்கு மேல் இட்லி விற்பனை நடந்துள்ளது.

இந்த உணவகங்கள் வெற்றிகரமாக செயல்பட்டுவருதற்கான விழா நேற்று நடைபெற்றது. மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மதியம் அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது. விழாவில் பேசிய மேயர் சைதை துரைசாமி, எந்த தடங்களும் இல்லாமல் வெற்றிகரமாக 200 அம்மா உணவகங்களையும் திறந்து செயல்படுத்தி வருகிறார்கள். 1000 உணவகங்கள் திறக்க வேண்டும் என்பது முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவு. அதன்படி படிப்படியாக மேலும் 800 உணவகங்கள் திறக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது என்று கூறினார்.

அரசு கல்லூரிகளில் அம்மா உணவகங்கள் திறக்கப்படவேண்டும் என்பது கல்லூரி மாணவர்களின் கோரிக்கையாகும். இதன்படி முதற்கட்டமாக அரசுக் கல்லூரிகளில் அம்மா உணவகங்கள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+