வைத்தியச் செலவுக்கு பணமில்லை...: மனமுடைந்த தந்தை மகனோடு தூக்கில் தொங்கினார்
கொழிஞ்சாம்பாறை: நோயைக் குணமாக்க பணமில்லை என்ற விரக்தியில் மகனைக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார் கேரள கூலித் தொழிலாளி.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பத்திரிப்பாலா அருகேயுள்ள பேரூரை சேர்ந்தவர் கண்ணன்(வயது 60). கூலி தொழிலாளியான அவரது மனைவி வசந்தா. இவர்களது மகன் கிரிதரன்(13). பத்திரிபாலாவில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
சமீபகாலமாக, கண்ணனின் உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்பட்டது. சிகிச்சை செலவுக்கு பணம் இல்லாததால் மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டாராம் கண்ணன். இந்த நிலையில் வசந்தா தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்தார்.
நேற்று காலை வெகுநேரமாகியும் கண்ணன் வீடு திறக்கப்படவில்லை. வீட்டில் ஆள் நடமாட்டமும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டின் அருகே சென்று திறந்து கிடந்த ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர்.
அங்கு கண்ணனும், கிரிதரனும் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ந்து, உடனடியாக பாலக்காடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜிபாலுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மனவேதனை அடைந்த கண்ணன் மகனை கொன்று தூக்கில் தொங்க விட்டு பின்னர் அவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். கண்ணன், கிரிதரன் உடல்களைப்பார்த்து வசந்தா மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுதனர்
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications