மூன்றாவது அணி அமைப்பது எளிதல்ல: பிரகாஷ் காரத்

திரிபுராவில் நடந்த கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர், வரும் மக்களவைத் தேர்தலில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து பலரும் பேசி வருகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஓர் அணியை அமைப்பது எளிதானதல்ல.
ஏனென்றால் மாநில கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியல் மூன்றாவது அணி அமைப்பதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.
அதிமுக, சமாஜவாதி, பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு ஏற்ப காங்கிரஸ் அல்லது பாஜக பக்கம் சாய்ந்துவிடும்.
இப்போதுள்ள மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி பாஜக எப்படியாவது மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறது. ஆனால் காங்கிரசுக்கு சரியான மாற்றாக பாஜக இருக்க முடியாது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல் போன்றவை அதிகரித்துள்ளன. அதனால் 2014-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரஸை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும்; அதே சமயம் மதவாதக் கட்சியான பாஜகவும் ஆட்சியை கைப்பற்றி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆகையால் காங்கிரஸ், பாஜக அல்லாத ஒரு மாற்றுக் கூட்டணியை உருவாக்குவது குறித்து அனைவரும் யோசிக்க வேண்டும் என்றார் பிரகாஷ் காரத்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications